எதிரிகள், துரோகிகள் மத்தியில் அதிமுக வெற்றி பெறும் -அமைச்சர் கே.பி.அன்பழகன்

Nov 08, 2018 10:03 AM 128

தமிழகத்தில் எப்போது இடைத்தேர்தல் நடத்தப்பட்டாலும் 20 தொகுதிகளிலும் அதிமுகவே வெல்லும் என உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.

அரூர், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் அதிமுக கிளை கழக தேர்தல் பணி பொறுப்பாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன், உயர்கல்வி துறை அமைச்சர் அன்பழகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.பி.அன்பழகன்,தமிழகத்தில் எப்போது இடைத்தேர்தல் நடத்தப்பட்டாலும் 20 இடங்களிலும் அதிமுக தான் வெற்றி பெறும் என்றார். எதிரிகளும், துரோகிகளும் களத்தில் இருந்தாலும்கூட, அதிமுக தனித்தே போட்டியிட்டு வெற்றி பெறும் என்று அவர் தெரிவித்தார்.

சர்கார் திரைப்படம் குறித்த செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்த அவர், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக படம் எடுக்கப்பட்டாலும் அதிமுகவுக்கு ஆதரவாகவே மக்கள் உள்ளனர் என்று அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறினார்.

 

Comment

Successfully posted