சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா செயற்கை கோள்

Jan 18, 2020 09:20 PM 407

சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா செயற்கைகோளை விரைவில் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மைய இயக்குனர் ராஜராஜன் தெரிவித்துள்ளார்.


புதுச்சேரியில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியை, சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் ராஜராஜன் தொடங்கி வைத்து பார்வையிட்டார். இதில், 100க்கும் மேற்பட்ட மாணவர்களின் அறிவியல் படைப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், குலசேகரபட்டிணம் ஏவு தளத்திற்கு இடம் முடிவாகி விட்டதாகவும், இந்த ராக்கெட் ஏவுதளம் ஒரு வருடத்தில் அமைக்கப்படும் எனவும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், சூரியனை ஆய்வு செய்ய, ஆதித்யா என்ற பெயரில் இந்த ஆண்டுக்குள் செயற்கைகோள் அனுப்பப்படும் எனவும், அந்த செயற்கைகோள், சூரியனின் தன்மை மற்றும் சூரியனின் பல்வேறு செயல்பாடுகளை ஆய்வு செய்ய உள்ளதாகவும் தெரிவித்தார்.

Comment

Successfully posted