கர்நாடக இடைத்தேர்தலில் பாஜக வெற்றி

Dec 09, 2019 04:51 PM 438

கர்நாடகாவில் நடைபெற்ற இடைத்தேர்தலில்  பாஜக 12  தொகுதிகளில் வெற்றி பெற்று அசத்தியுள்ளது. 

கர்நாடகா சட்டசபையில் காலியாக உள்ள 17 தொகுதிகளில் 15 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் கடந்த 5ந் தேதி நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது. இதில் ஆளும் பாஜக 12 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. 12 தொகுதிகளில் அக்கட்சி வெற்றி பெற்றுள்ளதால், சட்டப்பேரவையில் பெரும்பான்மையை பெற்று, பாஜக ஆட்சியை தக்க வைத்துக் கொண்டுள்ளது. அக்கட்சித் தொண்டர்கள் கர்நாடகா முழுவதும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Comment

Successfully posted