ராமர் கோவில் கட்டப்பட்டால் பாஜக நிச்சயம் 350 தொகுதிகளை கைப்பற்றும் -சுப்ரமணியன் சுவாமி

Oct 24, 2018 02:51 PM 341

ராமர் கோவில் கட்டப்பட்டால் வரும் மக்களவை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி நிச்சயம் 350 தொகுதிகளை கைப்பற்றும் என்று, அக்கட்சியின் மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்த அவர், தேசியம் மற்றும் இந்துத்துவா கோஷங்களை எழுப்பும் இளைஞர்களின் ஆதரவினால் 2019 தேர்தலில் பாஜக மெஜாரிட்டி பெறுவது எளிதானது என்றார்.

ராமர் கோவிலை அமைத்து காங்கிரஸ் தலைவர்களை திகார் சிறைக்கு அனுப்பினால் பாஜக 350 தொகுதிகளை கைப்பற்றும் என கூறிய அவர், காங்கிரஸ் தலைவர்களை ஜாமீன் வாகனம் என்றும் விமர்சித்துள்ளார்.

Comment

Successfully posted