மாணவர்களுக்கு காலை உணவு தயாரிக்கும் கூடத்தின் பூமி பூஜை விழா நடைபெற்றது

Feb 15, 2020 01:10 PM 449

சென்னையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்திற்காக, உணவு தயாரிக்கும் கூடத்தின் பூமிபூஜை விழாவில், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோர் பங்கேற்றனர்.

சென்னையில், அக்சய பாத்ரா என்ற தொண்டு நிறுவனத்தின் மூலம், அரசுப் பள்ளிகளில் உள்ள ஐந்தாயிரம் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழக அரசு மாணவர்களுக்கு அறிவித்துள்ள காலை உணவு திட்டத்திற்காக, க்ரீம்ஸ் சாலையில், புதிய உணவு தயாரிக்கும் கூடத்திற்கான பூமிபூஜை இன்று நடைபெற்றது. இவ்விழாவில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Comment

Successfully posted