பிளவக்கல் பெரியார் அணை பகுதியிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை

Feb 11, 2019 12:17 PM 126

யானைகள் சுற்றித்திரிவதால், ஸ்ரீவில்லிபுத்தூர் பிளவக்கல் பெரியார் அணை பகுதியிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடைவிதித்து வனத்துறை உத்தரவிட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதியில் பிளவக்கல் பெரியார் அணை அமைந்துள்ளது. மாவட்டத்தின் சுற்றுலா தளமாகவும் பிளவக்கல் அணை விளங்கிவருவதால், சுற்றுலா பயணிகள் வந்துசெல்வது வழக்கம். இந்நிலையில், கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் வறட்சி நிலவிவருவதால், யானைகள் மலை அடிவாரத்தில் சுற்றிதிரிகின்றன. சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி பிளவக்கல் அணை பகுதிக்கு செல்ல தற்காலிகமாக தடைவிதித்து வனத்துறை உத்தரவிட்டுள்ளது.

Comment

Successfully posted