மும்பை பங்குச் சந்தை 350 புள்ளிகள் அதிகரித்து புதிய சாதனை

Apr 01, 2019 03:23 PM 342

மும்பை பங்குச் சந்தை 350 புள்ளிகள் அதிகரித்து, 39 ஆயிரத்து 20 புள்ளிகளை தொட்டு புதிய சாதனை படைத்துள்ளது.

மும்பை பங்கு சந்தை மற்றும் தேசிய பங்கு சந்தைகளில், வர்த்தம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், பி.எஸ்.இ எனப்படும் மும்பை பங்கு சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ், 300 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து, 39 ஆயிரம் புள்ளிகளை கடந்தது. பங்கு சந்தை வரலாற்றில், முதல் முறையாக, 39 ஆயிரம் புள்ளிகளை கடந்து வர்த்தகம் நடைபெற்றதன் மூலம் புதிய வரலாறு படைக்கப்பட்டுள்ளது. அதே போல், தேசிய பங்குச் சந்தையிலும், ஏற்றம் காணப்படுகிறது. நிஃப்டி 90 புள்ளிகள் உயர்ந்து, 11 ஆயிரத்து 713 புள்ளிகளை தொட்டது.

Comment

Successfully posted