திருநாவுக்கரசை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி மனுதாக்கல்

Mar 15, 2019 03:42 PM 48

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான திருநாவுக்கரசை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசார் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இளம் பெண்களை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளநிலையில், சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்தநிலையில், கைதானவர்களில் திருநாவுக்கரசை என்பவரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசார், கோவை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். திருநாவுக்கரசின் இல்லத்தில் சோதனை நடைபெற்றநிலையில், அவரை காவலில் எடுத்து விசாரிக்க மனு செய்துள்ளது குறிப்பிட்டத்தக்கது.

Comment

Successfully posted