இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவாவில் "செமரு" எரிமலை வெடித்து சிதறியது

Dec 05, 2021 03:46 PM 9983

இந்தோனேசியாவில் செமேரு எரிமலை வெடித்த பகுதியில் பலர் காணாமல் போன நிலையில், இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவாவில் உள்ள செமரு எரிமலை திடீரென வெடித்து சிதறியது. எரிமலை வெடித்து சிதறியதில் 40 ஆயிரம் அடி உயரத்திற்கு சாம்பல் எழுந்தது.

இதனால், மலையடிவாரத்தில் வசித்த குடியிருப்பு வாசிகள், அங்கிருந்து வெளியேற தலைதெறிக்க ஓடினர்.எரிமலை வெடித்ததால், 5 புள்ளி 6 கிலோ மீட்டர் உயரத்திற்கு சாம்பல் கொட்டியதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், பலர் காணாமல் போன நிலையில், இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.

Comment

Successfully posted