சென்னை - சேலம் விமான சேவையில் 5 மாதங்களில் மட்டும், 17 ஆயிரத்து 621 பயணித்துள்ளனர்

Oct 12, 2018 12:36 PM 753

சென்னை - சேலம் இடையேயான விமான சேவை மூலம் 5 மாதங்களில் மட்டும், 17,621 பயணித்துள்ளனர்.

மத்திய அரசின் புதிய விமான போக்குவரத்து கொள்கையின்படி, மார்ச் 25ஆம் தேதி சேலம் விமான நிலையத்தில் மீண்டும் விமான சேவை தொடங்கப்பட்டது. தினமும் சென்னைக்கு இரண்டு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஏப்ரல் மாதம் முதல் ஆகஸ்டு மாதம் வரை 17,621 பயணிகள் பயணம் செய்துள்ளனர். ஆகஸ்டு மாதம் மட்டும் 3,429 பேர் பயணித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னை - சேலம் இடையேயான விமான சேவையை பயணிகள் பெருமளவில் பயன்படுத்தி வருவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Comment

Successfully posted