சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்விக்கு ரசிகர்கள் கூறும் 10 முக்கிய காரணங்கள்

May 13, 2019 04:58 PM 3912

12வது ஐபிஎல் தொடரின் இறுதி ஆட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை மூன்றாவது முறையாக வீழ்த்தி 4வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி.

2019 ஐபிஎல் தொடர் தரமான டி20 இறுதிப் போட்டியுடன் முடிவுக்கு வந்தது. 8 அணிகள் மோதிய இந்த தொடரின் இறுதி ஆட்டத்தில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் - தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதியது. போட்டியின் துவக்கம் முதல் இறுதி வரை, இரு அணிகளும் ஒருவரை, ஒருவர் முந்தி ஆதிக்கம் செலுத்தி, ரசிகர்களின் இதயத் துடிப்பை அதிகரிக்கச் செய்தனர்.

ஒரு கட்டத்தில் சென்னை அணியின் கையே ஓங்கி இருந்த நிலையில், இறுதியில் எங்கு தவறு நடந்தது என ரசிகர்கள் சமூகவலைதளங்களில் விவாதம் நடத்தி வருகின்றனர்.சென்னை அணி தோல்விக்கு ரசிகர்கள் சொல்லும் 6 காரணங்கள்

1.சென்னை அணியின் பதற்றம்.
2.ஹார்திக் பாண்டியாவின் கேட்ச்சை சுரேஷ் ரெய்னா மிஸ்பண்ணியது.
3. டூபிளசிஸ் ஓவரின் கடைசி பந்தை ஏறி வந்து ஆடி ஸ்டெம்பிங் முறையில் விக்கெட்டை ஆனது.
4.சுரேஷ் ரெய்னா ரிவ்யூ முறையை வீணடித்தது.
5.தோனி Over Throw-வில் ரன் அவுட் ஆனது.
6. ப்ராவோ பும்ராவின் ஷாட் பந்து வீச்சை அடிக்க நினைத்து அவுட்டானது.
7.வாட்சன் 2வது ரன் எடுக்க ஓடி அவுட்டானது.
8.ஹர்பஜன் போன்ற அனுபமிக்க வீரரை களத்திற்கு அனுப்பாமல் தாகூரை களமிறக்கியது.
9.இறுதி பந்தில் தாகூர் அவுட் ஆனது.
10.மும்பை அணியின் சிறந்த பந்து விச்சு.

Comment

Successfully posted