முதல்வர், துணை முதல்வர் நல்வழிகாட்டுதலின்படியே அரசும், கழகமும் செயல்படுகிறது

Jun 09, 2019 03:38 PM 130

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோரின் வழிகாட்டுதலின்படியே அதிமுக அரசும், கழகமும் செயல்படுவதாக அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தெரிவித்துள்ளார். திருச்சியில் 1 கோடியே 18 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை சுற்றுலாத் துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் துவங்கி வைத்தார். அங்குள்ள ஆயுதப்படை மைதானத்தில் 22 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மின்னொளி கூடைப்பந்து மைதானம், 4 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான புதிய ரவுண்டான மற்றும் 6 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான குளிர்சாதன பேருந்து நிழற்குடை, 85 லட்சம் ரூபாய் மதிப்பிலான புதிய உணவகத்துடன் கூடிய பல்நோக்கு கட்டிடம் என பல்வேறு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் துவங்கி வைத்தார்.

இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், கட்சியும் ஆட்சியும் முதல்வர், துணை முதல்வர் நல்வழிகாட்டுதலின்படியே நடைபெற்று கொண்டிருப்பதாக தெரிவித்தார். வெற்றியும் தோல்வியும் வாழ்வில் சகஜம் தான் என்றும் அவர் கூறினார்.

Comment

Successfully posted