பெரம்பலூரில் தொழிலாளர் நலத்துறை கட்டிடத்தை முதலமைச்சர் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்

Feb 22, 2019 05:00 PM 335

பெரம்பலூரில் 2 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள தொழிலாளர் நலத்துறை கட்டிடத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். பெரம்பலூர் ஒருங்கிணைந்த மாவட்ட வளாகத்தில் தொழிலாளர் நலத்துறையில் 2 கோடி ரூபாய் மதிப்பில் பல்வேறு அலுவலகங்களை உள்ளடக்கிய "ஒருங்கிணைந்த தொழிலாளர் நல கட்டிடங்கள் அமைக்கப்பட்டது. பணிகள் நிறைவு பெற்றதையடுத்து, கட்டிடங்களை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

இதில் மாவட்ட ஆட்சியர் சாந்தா, சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திர காசி, அரசு அதிகாரிகள், அதிமுக நிர்வாகிகள் என ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர்.

கள்ளக்குறிச்சியில் போக்குவரத்து காவல் நிலையம்

மேலும், விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில் 58 லட்சத்து 56 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள போக்குவரத்து காவல் நிலையத்தை காணொளி காட்சி மூலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். இதில் போக்குவரத்து உதவி ஆய்வாளர் தர்மராஜன் மற்றும் நிர்வாகிகளும், காவல்துறை துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

Comment

Successfully posted