பொங்கலை முன்னிட்டு விலையில்லா வேட்டி,சேலை திட்டம்: முதல்வர் தொடங்கி வைத்தார்

Dec 28, 2018 12:29 PM 277

பொங்கல் பண்டிகையொட்டி விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

நெசவாளர்கள் மற்றம் விசைத்தறி தொழிலாளர்களை ஊக்குவிக்கும் வகையில், ஆண்டுந்தோறும் பொங்கல் பண்டிகையொட்டி, விலையில்லா வேட்டி, சேலை வழங்கப்படுகிறது. அந்த வகையில், இந்தாண்டு, விலையில்லா வேட்டி, சேலை திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். பயனாளிகளுக்கு இலவச, வேட்டி சேலைகளை அவர் வழங்கினார். இந்த ஆண்டு பொங்கல் பண்டிக்கைக்காக தமிழகம் முழுவதும் ஒரு கோடியே 56 லட்சம் பேருக்கு விலையில்லா வேட்டி, சேலை வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Comment

Successfully posted