இந்திய தொழில் கூட்டமைப்பின் விழாவில் முதலமைச்சர் பெருமிதம்

Jan 30, 2020 10:04 PM 586

இரண்டாம் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்று முடிந்த ஒரே ஆண்டில், 19 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் 63 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இந்திய தொழில் கூட்டமைப்பின் 125 வது ஆண்டின் தொடக்க விழா சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற்றது.இந்த விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய முதலமைச்சர், தமிழக அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு முயற்சிகளால், பல புதிய தொழில் முதலீடுகளை ஈர்த்து, தொழில் துறையில் தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்ந்து வருவதாக பெருமிதம் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், இரண்டாம் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம், 83 ஆயிரம் வேலை வாய்ப்புகள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன என்றும் கூறினார்.

Comment

Successfully posted