7 பேரை விடுதலை செய்யக் கோரி ஸ்டாலின் கடிதம் எழுதியதில் காங்கிரஸ் கட்சிக்கு உடன்பாடு இல்லை

May 21, 2021 12:46 PM 1074

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யக் கோரி, குடியரசு தலைவருக்கு ஸ்டாலின் கடிதம் எழுதியதில் காங்கிரஸ் கட்சிக்கு உடன்பாடு இல்லை என, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.

ராஜுவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளான், முருகன், நளினி உள்ளிட்ட 7 பேரை விடுவிக்கக் கோரி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு, நேற்றைய தினம் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதினார். இந்நிலையில், இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் அழகிரி, எழுவர் விடுதலையை காங்கிரஸ் ஏற்காது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மேலும், அரசியல் அழுத்தம் காரணமாக குற்றவாளிகளை விடுதலை செய்ய கூடாது என்றும், தமிழர் என்ற அடிப்படையில் 7 பேரை விடுதலை செய்வது நியாயம் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

Comment

Successfully posted