காங்கிரஸ் உயர்மட்டக்குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது

Jun 12, 2019 11:52 AM 128

ராகுல் காந்தி, ராஜினாமா முடிவில் உறுதியாக இருக்கும் நிலையில் காங்கிரஸ் உயர்மட்டக்குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது

2017 ம் ஆண்டு காங்கிரஸ் கட்சித்தலைவராக பொறுப்பேற்ற ராகுல் காந்தி, மீண்டும் காங்கிரஸ் தலைமையில் ஆட்சிமைத்து விடலாம் என நம்பிக்கையுடன் தேர்தலை எதிர்கொண்டார். அவருக்கு உதவியாக அவரது தங்கை பிரியங்கா காந்தியும் களமிறக்கப்பட்டதால் வெற்றி உறுதி என்றே காங்கிரஸ் கட்சியினர் சொல்லி வந்தனர். ஆனால் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. அமேதி தொகுதியில் ராகுல் காந்தி தோல்வி அடைந்தது அவருக்கு பேரதிர்ச்சியாக இருந்தது. இதையடுத்து தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் கட்சித்தலைவர் பதவியில் இருந்து விலக விருப்பம் தெரிவித்தார். அவரது விலகலை கட்சியினர் ஏற்காதபோதும் ராகுல் காந்தி ராஜினாமா செய்வதில் உறுதியாக இருப்பதால் சிக்கல் பெரிதாகியுள்ளது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் உயர்மட்டக்குழு கூட்டம் ஏ.கே. அந்தோணி தலைமையில் இன்று டெல்லியில் நடைபெற உள்ளது. இதில் புதிய செயல் தலைவர் தேர்வு செய்யப்படலாம் என எதிர்பார்ப்பு நிலவுகிறது. பிரியங்கா காந்தி, சச்சின் பைலட், அஷோக் கெலாட், ஜோதிர் ஆதித்யா சிந்தியா ஆகியோரில் ஒருவர் செயல் தலைவராக நியமிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

Comment

Successfully posted