இலங்கையின் முன்னாள் அதிபர் ராஜபக்சேவுக்கு வாழ்த்து கூறிய திமுக :தம்பித்துரை குற்றச்சாட்டு

Feb 24, 2019 12:50 PM 289

ஈழத்தமிழர்களின் படுகொலைக்கு காரணமான இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேவுக்கு வாழ்த்து தெரிவித்தது தி.மு.க. என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பித்துரை குற்றம்சாட்டியுள்ளார்.

அதிமுகவின் தேர்தல் பிரச்சார குழுவின் ஆலோசனைக் கூட்டம் ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தம்பிதுரை, செங்கோட்டையன், பா.வளர்மதி, கோகுல இந்திரா உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின்னர் நியூஸ் ஜெ தொலைக்காட்சிக்கு பிரத்யேக பேட்டியளித்த தம்பிதுரை, இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டபோது மத்திய காங்கிரஸ் அரசில் அங்கம் வகித்த திமுக நீலிக்கண்ணீர் வடித்ததாக குற்றம்சாட்டினார்.

Comment

Successfully posted