சி.ஏ.ஏ தொடர்பான முதலமைச்சரின் கேள்விக்கு திமுகவால் பதிலளிக்க முடியவில்லை: அமைச்சர் ஓ.எஸ்.மணியன்

Feb 26, 2020 09:30 AM 175

குடியுரிமை சட்டத் திருத்தத்தால் தமிழகத்தில் யாருக்காவது எந்த பாதிப்பாவது ஏற்பட்டுள்ளதா என்ற முதலமைச்சர் பழனிசாமியின் கேள்விக்கு, திமுகவினரால் பதில் அளிக்க முடியவில்லை என கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி நாகை அரசு தலைமை மருத்துவமனையில், பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரங்களை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் அணிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  ஜனநாயக நாட்டில், போராட அனைவருக்கும் உரிமை உள்ளபோதிலும், பொய்யான தகவல்கள் மூலம் திமுக போராட்டங்களை தூண்டிவிடுவதாக குற்றம்சாட்டினார்.

Comment

Successfully posted