சிறுவர்களை பிரசாரத்தில் ஈடுபடுத்திய திமுகவினர்

Apr 16, 2019 03:04 PM 69

விருதுநகர் அருகே தின்பண்டங்களை வாங்கித் தருவதாக கூறி, சிறுவர்களை பிரசாரத்தில் ஈடுபடுத்திய திமுகவினரின் செயல் அப்பகுதி மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. காரியாபட்டி அருகே கல்குறிச்சியில், பிரசாரத்திற்கு திமுகவினர் பெரும்பாலானோர் வராமல் இருந்துள்ளனர். எனவே, கூட்டம் வராததால் திமுகவினர் சிறுவர்களை அழைத்து வந்து, டீ, பஜ்ஜி போன்ற தின்பண்டங்களை வாங்கித் தருவதாகக் கூறி அவர்களை பிரசாரத்தில் ஈடுபடுத்தினர்.

சிறுவர்களை திமுக கொடியை பிடிக்க சொல்லியும், வீடுவீடாக அழைத்து சென்று வாக்கு சேகரிக்கவும் அவர்கள் பயன்படுத்தினர். திமுகவினரின் இந்தச் செயல் அப்பகுதி மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

Comment

Successfully posted