பல்வேறு ஓவியங்களுடன் காட்சிதரும் அரசு துவக்கப்பள்ளி

Jun 12, 2019 12:00 PM 54

திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவிலில் இயங்கி வரும் அரசு துவக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியர் உதவியுடன் பட்டாம்பூச்சி என்ற அமைப்பை சேர்ந்த ஆசிரியர்கள் பள்ளி முழுவதும் வர்ணம் பூசி, பல்வேறு ஓவியங்களை வரைந்து அசத்தியுள்ளனர்.

காங்கேயம் அருகே உள்ள வெள்ளகோவில் டி.ஆர்.நகரில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் கல்வி கற்று வருகின்றனர். ஆங்கில வழிக்கல்வியில் செயல்படும் இப்பள்ளியை மேலும் மெருகேற்றும் வகையில் தலைமை ஆசிரியர் திட்டம் ஒன்றை திட்டியிருந்தார். இவருக்கு உறுதுணையாக முன்னாள் மாணவர்களும் செயல்பட்டனர். பட்டாம் பூச்சி என்ற அமைப்பை சார்ந்த 10க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இலவசமாக வர்ணம் பூசி அழகிய ஓவியங்கள் வரைந்து கொடுப்பதாக உறுதி அளித்தனர். இதை தொடர்ந்து கோடைவிடுமுறை தினத்தில் 10க்கும் மேற்பட்ட நாட்கள் பள்ளியிலேயே தங்கி மாணவ மாணவியர்களுக்கு பிடித்தது போல் அழகிய ஓவியங்கள் வரையப்பட்டன. அப்துல் காலம் ஓவியத்துடன் அறிவியல் சார்ந்த ஓவியங்கள் மற்றும் விவேகானந்தர் ஓவியங்களை வரைந்துள்ளனர்.

Comment

Successfully posted