உபரி நீரை மற்றொரு ஏரிக்கு கொண்டு செல்ல வழி வகை செய்த தமிழக அரசு

Dec 02, 2019 07:10 AM 180

கிருஷ்ணகிரி அருகே ஏரியிலிருந்து வீணாக வெளியேரும் உபரி நீரை மற்றொரு ஏரிக்கு கடத்த வழி வகை செய்த தமிழக அரசுக்கும், சட்டமன்ற உறுப்பினருக்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரை அடுத்த பண்ணந்தூர் கிராமத்தில் உள்ள பெரிய ஏரியில் ஆண்டு தோறும் மழைநீர் தேங்கி உபரி நீர் அதிகமாக வெளியேருகிறது. அவ்வாறு வெளியேரும் நீரை சின்ன ஏரிக்கு கொண்டு செல்ல பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் ஆய்வு மேற்கொண்டது. மேலும், பெரிய ஏரியிலிருந்து நீரை உறிஞ்சி சின்ன ஏரியை நிரப்ப அதிகமான மின் தேவையும் ஏற்பட்டது. இந்நிலையில், அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சி.வி. ராஜேந்திரனின் முயற்சியின் பேரில், சோலார் தட்டுக்கள் அமைத்து அதன்மூலம் மின்சார உற்பத்தி செய்து, நீர் உறிஞ்சு நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்கு தேவைபடும் 23 லட்ச ரூபாயை சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து அளிப்பதாக, சி.வி. ராஜேந்திரன் உறுதியளித்ததை தொடர்ந்து மகிழ்ச்சி அடைந்த பொதுமக்கள் அரசுக்கும் சட்டமன்ற உறுப்பினருக்கும் நன்றி தெரிவித்துள்ளனர்.

Comment

Successfully posted