ஆளுநர் கிரண்பேடி மீது புகார்

Aug 01, 2018 05:52 PM 282

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி மீது, 8 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் உரிமை மீறல் புகார் அளித்துள்ளனர். சபாநாயகர் வைத்திலிங்கத்திடம் அளித்த புகார் மனுவில், சட்டப்பேரவை சுதந்திரம், மாண்பை குலைக்கும் வகையில் ஆளுநர் கிரண்பேடி பேசுவதாக தெரிவித்துள்ளனர். பாஜக நியமன எம்.எல்.ஏக்கள் 3 பேரை சட்டப்பேரவையில் அனுமதிப்பது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதை சுட்டிக்காட்டி உள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், சட்டப்பேரவைக்கு நியமன எம்.எல்.ஏக்கள் 3 பேர் வரும்போதுதான், நிதி மசோதாவிற்கான ஒப்புதல் கிடைக்கும் என்று ஆளுநர் அத்துமீறி கூறி வருவதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comment

Successfully posted