இந்து ஆன்மீக கண்காட்சி சென்னையில் வரும் 28-ம் தேதி தொடக்கம்

Jan 20, 2020 10:48 AM 254


இந்து ஆன்மீக கண்காட்சியை முன்னிட்டு நடைபெறும், விவேகானந்தர் ரத யாத்திரை சென்னையில் இன்று தொடங்குகிறது.

இந்து ஆன்மீக கண்காட்சி வரும் 28-ம் தேதியன்று சென்னையில் தொடங்குகிறது. கண்காட்சியின் நோக்கத்தையும், சிறப்புக்களையும் எடுத்துச் சொல்லும் வகையில், கண்காட்சிக்கு சில நாள்கள் முன்னதாக ரத யாத்திரை நடைபெறும்.

இந்த ஆண்டு நடைபெற உள்ள இந்து ஆன்மீக கண்காட்சியினை விளக்கும் விவேகானந்தர் ரத யாத்திரை, சென்னையில் இன்று தொடங்குகிறது. இதற்கான பூஜை, நேற்று மாலை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் நடைபெற்றது. அதில், ராமகிருஷ்ண மடத்தின் மேலாளர் சுவாமி தர்மிஷ்டானந்தர் ரதங்களுக்கு பூஜை செய்தார்.

மேலும், பண்பு மற்றும் கலாச்சார பயிற்சி முனைவு அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ராஜலக்ஷ்மி,  பத்திரிகையாளர் கிரிஜா ராகவன், அறக்கட்டளை நிர்வாகி கீதாராஜசேகரன் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியை ஒட்டி கோலாட்டம், சிலம்பாட்டம், மற்றும் தமிழர் பாரம்பரிய கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

Comment

Successfully posted