இந்திய அணி வலுவான நிலையில் உள்ளது

Aug 20, 2018 11:06 AM 454

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே நடைபெற்ற 2 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்று இங்கிலாந்து அணி முன்னிலையில் உள்ளது. கடந்த 18-ம் தேதி 3வது டெஸ்ட் போட்டி தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்தியா வீரர்களின் சிறப்பான ஆட்டத்தால், முதல் இன்னிங்சில் 329 ரன்கள் குவித்தது. அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி, இந்திய வீரர்களின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. அந்த அணி முதல் இன்னிங்சில் 161 ரன்களை எடுத்தது. இந்தியாவின் ஹர்திக் பாண்டியா 5 விக்கெட்டுகளும், இஷாந்த் சர்மா மற்றும் பும்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், ஷமி ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். இதனைத் தொடர்ந்து 2வது இன்னிங்சை இந்திய அணி விளையாடத் தொடங்கியது. ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 124 ரன்கள் எடுத்துள்ளது. புஜாரா 33 ரன்களுடனும், கோலி 8 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். 292 ரன்கள் முன்னிலை பெற்று இந்தியா வலுவான நிலையில் உள்ளது.

 

Comment

Successfully posted