அயோத்தி தீர்ப்பு குறித்து பிரதமர் மோடி டுவிட்டரில் கருத்து

Nov 09, 2019 06:24 AM 6704

அயோத்தி தீர்ப்பு எதுவாக இருந்தாலும் அதில் யாருக்கும் வெற்றி தோல்வி கிடையாது என பிரதமர் மோடி டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க உள்ள நிலையில், பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் தீர்ப்பு வருவது கருத்து பதிவிட்டுள்ளார். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு யாருக்கு சாதகமாக அமைந்தாலும் மத நல்லிணக்கத்தை மக்கள் கடைபிடிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். தீர்ப்பு எதுவாக இருந்தாலும் அதில் யாருக்கும் வெற்றி தோல்வி கிடையாது என்றும் பிரதமர் கருத்து தெரிவித்துள்ளார்.

நாட்டின் பாரம்பரியத்தையும், மத நல்லிணக்கத்தையும் மக்கள் கடைபிடிக்க வேண்டும் என்று கூறிய பிரதமர், நாட்டின் அமைதியை மேலும் வலுப்படுத்த அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என தெரிவித்தார். நீதித்துறையின் மாண்பையும், நாட்டின் நலனையும் கருத்தில் கொண்டு அனைத்து சமூகத்தினரும் அமைதி காக்க வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.

Comment

Successfully posted