குளிர்காலம் தொடங்குவதால் கேதார்நாத் கோயில் மூடப்படுகிறது

Nov 09, 2018 03:01 PM 358

குளிர்காலம் தொடங்குவதையடுத்து கேதார்நாத் கோயில் இன்று முதல் மூடப்பட உள்ளதால் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

உத்தரகாண்டில் உள்ள கேதார்நாத் கோயில் கடந்த ஏப்ரல் 29-ம் தேதி மஹாசிவராத்திரி அன்று திறக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து 8 மாதங்களாக லட்சக்கணக்கான பொதுமக்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர்.இந்நிலையில் குளிர்காலம் தொடங்க உள்ளது.

இதனால் அப்பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு நிலவும் என்பதால் இன்று முதல் கேதார்நாத் கோயில் மூடப்படுகிறது. இதற்காக சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகங்கள் காலை முதல் நடைபெற்று வருகின்றன. இனி கேதார்நாத் கோயில் மீண்டும் ஏப்ரல் கடைசி அல்லது மே முதல் வாரத்தில் திறக்கப்பட உள்ளது.

 

Comment

Successfully posted