செய்யது பாவா பஹ்ருதீன் ஒலியுல்லா தர்ஹாவின் கந்தூரி திருவிழா

Dec 13, 2019 09:12 AM 119

நாகையில் உள்ள செய்யது பாவா பஹ்ருதீன் ஒலியுல்லா தர்ஹாவின் சந்தனக் கூடு ஊர்வலம் சிறப்பாக நடைபெற்றது.

வேளாங்கண்ணியை அடுத்த தெற்குப் பொய்கைநல்லூரில் பழமை வாயந்த செய்யது பாவா பஹ்ருதீன் ஒலியுல்லா தர்ஹா அமைந்துள்ளது. கடந்த 3ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய தர்ஹாவின் ஆண்டு கந்தூரி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சந்தனக் கூடு ஊர்வலம், விமரிசையாக நடைபெற்றது. மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூடு முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. இதில் சுற்றுவட்டாரப் பகுதியை சேர்ந்த இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். நிகழ்ச்சியில் நடைபெற்ற வண்ணமிகு வாணவேடிக்கையை மக்கள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.

Comment

Successfully posted