மோடி பயோபிக் திரைப்படம் ஏப்ரல் 12ம் தேதி ரிலீஸ்

Mar 15, 2019 05:08 PM 80

பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு உருவாகியுள்ள பி.எம். நரேந்திர மோடி என்னும் திரைப்படம் வரும் ஏப்ரல் 12ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. கடந்த ஜனவரி 5ம் தேதி நடைபெற்ற இந்த படத்தின் போஸ்டர் வெளியீட்டு விழாவில் மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அதன் பின்னர் ஜனவரி 28ம் தேதி இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியது.

பிரபல பாலிவுட் நடிகர் விவேக் ஓப்ராய் நரேந்திர மோடியாக நடிக்கும் இப்படத்தை ஒமங் குமார் இயக்கி வருகிறார். மும்பையில இரண்டாம் கட்ட படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஏப்ரல் 12ம் தேதி நரேந்திர மோடி திரைப்படம் திரைக்கு வரும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

Comment

Successfully posted