தமிழகத்தில் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்றது: அசுதோஷ் சுக்லா

Apr 19, 2019 07:38 AM 56

தமிழகத்தில் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்றதாக, தேர்தல் டிஜிபி அசுதோஷ் சுக்லா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் 38 மக்களவை மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் எந்தவித அசம்பாவிதமும் இன்றி அமைதியாக நடந்து முடிந்துள்ளது எனக் கூறியுள்ளார்.

67ஆயிரத்து 720 வாக்குசாவடிகளில் 1 லட்சத்து 40 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்ததாகவும், 160 கம்பெனி மத்திய படைகளும் தேர்தல் பணியில் ஈடுபட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக வாக்காளர்கள் எந்தவித அச்சமும் சிரமமும் இன்றி சுதந்திரமாக வாக்களித்ததாக அசுதோஷ் சுக்லா கூறியுள்ளார்.

Comment

Successfully posted