2-ம் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டார் பிரதமர்

Apr 08, 2021 09:06 AM 653

கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோசை பிரதமர் மோடி செலுத்திக் கொண்டார்.

கொரோனா தடுப்பூசி தொடர்பான அச்சத்தையும், தயக்கத்தையும் போக்கும் வகையில் பிரதமர் மோடி, கடந்த மாதம் ஒன்றாம் தேதி கோவாக்சின் தடுப்பூசி போட்டுக் கொண்டார். டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பணிபுரியும் புதுச்சேரியை சேர்ந்த செவிலியர் நிவேதா, அவருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தினார். முதல் டோஸ் செலுத்தப்பட்டு ஐந்து வாரங்கள் கடந்த நிலையில், இன்று காலை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில், இரண்டாம் தவணை கொரோனா தடுப்பூசியை பிரதமர் மோடி எடுத்துக் கொண்டார். அவருக்கு புதுச்சேரியை சேர்ந்த நிவேதா, பஞ்சாப்பை சேர்ந்த நிஷா சர்மா ஆகியோர் தடுப்பூசி செலுத்தினர். பின்னர், ட்விட்டரில் செய்தி வெளியிட்டுள்ள பிரதமர் மோடி, கொரோனாவை தடுக்க உள்ள சில வழிகளில் தடுப்பூசி முக்கியமானது என்றும் தகுதியுடைய அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
Comment

Successfully posted