சின்னத்திரை நடிகரை காவல்துறையினர் கைது

Dec 01, 2019 06:33 PM 707

சென்னை திருவான்மியூரில் மனைவியைத் தாக்கிய சின்னத்திரை நடிகரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருவான்மியூர் ஏரிக்கரைச் சாலையைச் சேர்ந்த ஜெயஸ்ரீ என்பவர் சின்னத்திரை நடன இயக்குனராகப் பணியாற்றி வருகிறார். இவரது கணவர் ஐஸ்வர் ரகுநாதன் சின்னத்திரையில் நடிகராக நடித்து வருகிறார். இந்நிலையில் ஜெயஸ்ரீயின் சில சொத்து ஆவணங்களை வைத்து ஐஸ்வர் கடன் பெற்றதாகக் கூறப்படுகிறது. இதுபற்றி ஜெயஸ்ரீ அவரிடம் கேட்ட போது ஆத்திரமடைந்த ஐஸ்வர், ஜெயஸ்ரீயைத் தாக்கியுள்ளார். இதுகுறித்து ஜெயஸ்ரீ கொடுத்த புகாரின் பேரில் அடையாறு மகளிர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து ஐஸ்வர், அவரது தாயார் சந்திரா ஆகியோரைக் கைது செய்தனர்.

Comment

Successfully posted