தென்னிந்திய சர்க்கரை ஆலைகள் சங்கத்தினர் பிரதமரை நேரில் சந்தித்து கோரிக்கை

Aug 03, 2018 11:40 AM 748

தென்னிந்திய சர்க்கரை ஆலைகள் சங்க தமிழக தலைவர் பழனி ஜி.பெரியசாமி தலைமையில் அந்த சங்கத்தினர் டெல்லிக்கு சென்றனர். பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமனை சந்தித்து, பிரதமர் மோடியை சந்திக்க ஏற்பாடு செய்யும்படி கோரிக்கை விடுத்தனர். இதன்படி, பிரதமரை சந்திக்க மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் ஏற்பாடு செய்தார். இதையடுத்து பிரதமரை சந்தித்த தென்னிந்திய சர்க்கரை ஆலைகள் சங்கத்தினர், கடந்த 5 பருவ காலத்தில் தமிழகத்தில் மழை பெய்யாததால் 141 ஆண்டுகளாக இல்லாத வறட்சி நிலவுவதாக தெரிவித்தனர். இதனால் சர்க்கரை உற்பத்திக்கான செலவு அதிகமாகி வருவாய் வெகுவாக குறைந்துவிட்டதாக குறிப்பிட்டனர். இதன் காரணமாகவே, வங்கிகளில் பெற்ற கடனை செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். இதனை கேட்ட பிரதமர் மோடி, விவசாயிகள் எந்த வகையிலும் பாதிக்கப்படக் கூடாது என்றும், தங்களின் கோரிக்கைகளை பரிசீலிப்பதாகவும் தெரிவித்ததாக, தென்னிந்திய சர்க்கரை ஆலைகள் சங்கத்தினர் கூறினர்.

Comment

Successfully posted