பட்டாசு வெடிப்பதற்கு விதித்துள்ள கட்டுப்பாட்டை தளர்த்த வேண்டும் - தமிழ்நாடு பட்டாசு உற்பத்தியாளர்கள் கோரிக்கை

Nov 26, 2018 05:16 PM 293

பட்டாசு வெடிப்பதற்கு உச்ச நீதிமன்றம் விதித்துள்ள கட்டுப்பாட்டை தளர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, தமிழ்நாடு பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.

தீபாவளி தினத்தன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனால், பட்டாசு தொழில் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள பட்டாசு வணிகர்கள், ஏற்கனவே நடைமுறையில் இருந்த சட்ட திட்டங்களை அமல்படுத்த வேண்டும் வலியுறுத்தி உள்ளனர்.

பட்டாசு தொழிலை பாதுகாக்கும் வகையில், மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்து மறு உத்தரவை பெற்றுத் தர வேண்டும் என்று பட்டாசு உற்பத்தியாளர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Comment

Successfully posted