தமிழக வாக்காளர் பட்டியல் ஜனவரி 4ம் தேதி வெளியாகாது -சத்ய பிரதா சாஹு

Dec 28, 2018 05:30 PM 584

இறுதி வாக்காளர் பட்டியல் வரும் ஜனவரி மாதம் 4 ஆம் தேதி வெளியாகாது என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் வாக்காளர்களின் தகவல்கள் ஒன்றிணைக்கப்பட்டு வருகிறது. இதற்கென தனி வலைதளம் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில், இறுதி வாக்காளர் பட்டியல் ஜனவரி மாதம் 4 ஆம் தேதி வெளியாவதாக இருந்தநிலையில், வாக்காளர் பட்டியல் அந்த நாளில் வெளியாகாது என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் வெளியிட, ஜனவரி 10 ஆம் தேதி வரை கால அவகாசம் கேட்டு இந்திய தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும் அவர் கூறினார். புதிய வலைதளம் மூலம் நாடு முழுவதும் உள்ள வாக்காளர் பட்டியல் ஒருங்கிணைக்கப்படும் அதே வேளையில், இரட்டை பதிவுகள் முழுவதும் தவிர்க்கப்பட வாய்ப்புள்ளதாகவும் சத்ய பிரதா சாஹு தெரிவித்துள்ளார்.

Comment

Successfully posted