2019 மற்றும் 2020ம் ஆண்டுகளுக்கான தமிழ்நாடு கலைமாமணி விருது!

Feb 20, 2021 05:06 PM 11174

2019 மற்றும் 2020ம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகளை வழங்குகிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி! 

2019ஆம் ஆண்டிற்கான விருது பெறுவர்கள் மற்றும் அவர்கள் சார்ந்த துறை:

நூல் ஆசிரியர் முத்துக்கிருஷ்ணன்,வைகைச்செல்வன், எழுத்தாளர் ஆவடிக்குமார், இசைக்கலைஞர்கள் குருசரண், அக்கரை சகோதரிகள், ஆச்சாள்புரம் சின்னதம்பி, திருநாகேஸ்வரம் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலைமாமணி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

நாடக நடிகர்கள் மா.வீ.முத்து, T. ராஜேந்திரன், பரதநாட்டிய ஆசிரியர்கள் முரளிதரன், சியாம் சுந்தர், வில்லிசைக்கலைஞர் எஸ்.பி.முத்துலெட்சுமி, தெம்மாங்கு பாடகர் தங்கவேலு ஆகியோரும் விருது பெறுகின்றனர்.

இசை நாடக நடிகர்கள் கிருஷ்ணப்பா, பி.எஸ்.முத்துக்கிருஷ்ணன், நடிகர் ராமராஜன், யோகிபாபு, இயக்குநர் லியாகத் அலிகான், நகைச்சுவை நடிகை தேவதர்ஷினி, இசையமைப்பாளர் தினா, பாடலாசிரியர் காமகோடியன், ஒளிப்பதிவாளர் ரகுநாத ரெட்டி, பின்னணி பாடகர்கள் அனந்த், சுஜாதா, தயாரிப்பாளர் கலைப்புலி தாணு உள்ளிட்ட 59 கலைஞர்களின் பெயர்களும் விருது பட்டியலில் இடம் பெற்றுள்ளது.

2019ஆம் ஆண்டிற்கான புரட்சித்தலைவி ஜெ ஜெயலலிதா சிறப்பு கலைமாமணி விருது :

புரட்சித்தலைவி ஜெ ஜெயலலிதா சிறப்பு கலைமாமணி விருதுகளுக்கு, நடிகை சரோஜா தேவி, திரைப்பட பாடகி பி.சுசீலா, நாட்டிய கலைஞர் அம்பிகா காமேஷ்வர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அகில இந்திய விருதுகளில், சீனி விஸ்வநாதனுக்கு பாரதி விருதும், இசைத்தமிழ் கலைஞர் எஸ். ராஜேஸ்வரிக்கு எம்.எஸ்.சுப்புலட்சுமி விருதும், நாட்டிய கலைஞர் அலர்மேல் வள்ளிக்கு பாலசரஸ்வதி விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.

2019-ஆம் ஆண்டிற்கான  மூத்த கலைஞர்களுக்கான கலைமாமணி விருது:

நாடக நடிகர் வீ.மூர்த்தி, திரைப்பட நடிகை பசி சத்யா உள்ளிட்ட 5 பேருக்கு வாழும் மூத்த கலைமாமணி விருதாளர்களுக்கான பொற்கிழி வழங்கப்படுகிறது.

 

2020-ஆம் ஆண்டுக்கான கலைமாமணி விருது பெறுவர்கள் மற்றும் அவர்கள் சார்ந்த துறை:

2020-ஆம் ஆண்டுக்கான கலைமாமணி விருது, சமய சொற்பொழிவாளர் கே.கல்யாணராமன், கதையாசிரியர் செந்தூர் பாண்டியன், நூல் ஆசிரியர் பனப்பாக்கம் சுகுமார், எழுத்தாளர் அரசு பரமேசுவரன், இசைக்கலைஞர்கள் ஜான் மோகன், முருகபூபதி, திருப்பனந்தாள் எஸ்.மாரிமுத்து, டி.ஆர். சுந்தரேசன் உள்ளிட்டோருக்கு வழங்கப்படுகிறது.

பரதநாட்டிய கலைஞர்கள் ஜனார்தனன், கவிதா சார்லஸ், கரகாட்டக் கலைஞர் பழனியம்மாள், மரக்கால் ஆட்டக்கலைஞர் கோவிந்தராஜ், இசை நாடக நடிகர்கள் வி.எம்.முருகப்பா, கே.ஆர். எம். இந்திரா உள்ளிட்டோர் கலைமாமணி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

திரைப்பட நடிகர்கள் சிவகார்த்திக்கேயன், ஐஸ்வர்யா ராஜேஷ், மதுமிதா, இசையமைப்பாளர் டி. இமான், பாடலாசிரியர் காதல் மதி, தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், வசனகர்த்தா வி. பிரபாகர், சண்டை பயிற்சியாளர் ஜாகுவார் தங்கம், இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன், இயக்குநர் மற்றும் நடிகரான ரவி மரியா உள்ளிட்ட 65 கலைஞர்களின் பெயர்களும் விருது பட்டியலில் இடம் பெற்றுள்ளது.

2020-ஆம் ஆண்டிற்கான புரட்சித்தலைவி ஜெ ஜெயலலிதா சிறப்பு கலைமாமணி விருது :

புரட்சித்தலைவி ஜெ ஜெயலலிதா சிறப்பு கலைமாமணி விருதுகளுக்கு, நடிகை சௌகார் ஜானகி, இசைக்கலைஞர் ஜமுனா ராணி, நாட்டியக் கலைஞர் பார்வதி ரவி கண்டசாலா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அகில இந்திய விருதுகளில், சுகி சிவத்திற்கு பாரதி விருதும், இசைத்தமிழ் கலைஞர் வாணி ஜெயராமிற்கு எம்.எஸ்.சுப்புலட்சுமி விருதும், நாட்டிய கலைஞர் சந்திரா தண்டாயுதபாணிக்கு பாலசரஸ்வதி விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.

2020-ஆம் ஆண்டிற்கான  மூத்த கலைஞர்களுக்கான கலைமாமணி விருது:

வில்லிசை கலைஞர் பி.எஸ்.கோமதி, நாடக நடிகை எஸ்.என். பார்வதி உள்ளிட்ட 4 பேருக்கு வாழும் மூத்த கலைமாமணி விருதாளர்களுக்கான பொற்கிழி வழங்கப்படுகிறது.

Comment

Successfully posted