தென்காசி வர்த்தக சங்கம் முதலமைச்சருக்கு நன்றி தெரிவிப்பு

Aug 25, 2019 10:53 AM 199

தென்காசியை தனி மாவட்டமாக அறிவித்ததற்காக தென்காசி வர்த்தக சங்கம் தமிழக அரசுக்கும், முதலமைச்சருக்கும் நன்றி தெரிவித்துள்ளனர். 

தென்காசியை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டம் உருவாக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருந்தார்.  இதற்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்து வரும் நிலையில் தென்காசி வர்த்தக சங்கம் சார்பில் வைத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய சட்டமன்ற உறுப்பினர் செல்வமோகன், தென்காசியை தலைமையிடமாக அறிவித்தது அனைவருக்கும் மகிழ்ச்சியளிப்பதாக கூறினார். இந்தக் கூட்டத்தில் வர்த்த சங்கத்தைச் சார்ந்தவர்கள்,  அதிமுக  நிர்வாகிகள், தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Comment

Successfully posted