திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலை தள்ளி வைக்கக்கோரிய மனு தள்ளுபடி

May 15, 2019 03:15 PM 67

திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலை தள்ளிவைக்க கோரிய வழக்கை உயர் நிதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது

மதுரையைச் சேர்ந்த கேகே ரமேஷ், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில்,திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டிருந்தார். எனவே, இடைத்தேர்தலை ரத்து செய்ய அல்லது தள்ளிவைக்க உத்தரவிட வேண்டும் என அவர் கோரியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் நிஷாபானு, தண்டபாணி அமர்வு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. தேர்தல் நடவடிக்கைகளில் நீதிமன்றம் தலையிட இயலாது என்றும், தேவைப்படும் பட்சத்தில் மனுதாரர் தேர்தல் ஆணையத்தை அணுகலாம் எனவும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

Comment

Successfully posted