சுகப் பிரசவத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் திருவண்ணாமலை மருத்துவ கல்லூரி அரசு மருத்துவமனை

Dec 04, 2018 12:38 PM 558

திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சுகப்பிரசவத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவதால் அண்டை மாவட்டங்களை சேர்ந்தவர்களும் அதிகளவில் வந்து சிகிச்சை பெறுகின்றனர். இதுகுறித்த ஒரு செய்தித் தொகுப்பை பார்க்கலாம்...

கர்ப்பிணி தாய்மார்களுக்கு தவிர்க்க முடியாத சூழலில் மட்டுமே சிசேரியன் எனப்படும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்ப்டட நிலையில், தற்போது அதிகளவில் சிசேரியன் மூலம் குழந்தைகள் பிறக்கின்றன.இந்நிலையில் திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அதிகளவில் சுகப்பிரசவம் செய்யப்படுவதால், அந்த மாவட்டம் மட்டுமின்றி, வேலூர், விழுப்புரம், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த கர்ப்பிணி பெண்கள் இந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற அதிகளவில் வருகின்றனர்.

இந்த மருத்துவமனையில் இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 7 ஆயிரத்து 99 பிரசவங்கள் நடைபெற்றுள்ள நிலையில், 2 ஆயிரத்து 840 கர்ப்பிணிகளுக்கு மட்டுமே அதாவது 35 சதவிகிதம் பேருக்கு மட்டுமே சிசேரியன் செய்யப்பட்டுள்ளது.இந்த மருத்துவமனைக்கு அதிகளவில் கர்ப்பிணிகள் வருவதால், லட்சியா என்ற திட்டம் மூலம் தனியார் மருத்துவமனைக்கு இணையான வசதிகளுடன் மருத்துவமனையின் மகப்பேறு பிரிவு கூடுதல் வசதிகளுடன் விரிவாக்கம் செய்யப்பட்டடுள்ளது. பல்வேறு மருத்துவ உபகரணங்களும் புதிதாக கொண்டு வரப்பட்டுள்ளன.

பல்வேறு வசதிகளுடன் உள்ள இந்த மருத்துவமனையில் அரசு உதவிகளும் கிடைப்பதாக கர்ப்பிணி பெண்கள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.

அரசு மருத்துவமனைகளில் தேவையான வசதிகள் இருக்காது என்ற காரணத்தால் தனியார் மருத்துவமனைகளை நாடி, அங்கு, கட்டாய சிசேரியன் செய்துக் கொள்ளும் கர்ப்பிணிப் பெண்களுக்கு இந்த மருத்துவமனை ஒரு வரப்பிரசாதமாகவே உள்ளது.

 

 

 

 

 

 

 

Comment

Successfully posted