பிரதமர் தலைமையில் இன்று மத்திய அமைச்சரவைக் கூட்டம்

Mar 31, 2021 08:03 AM 934

மத்திய அமைச்சரவைக் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் இன்று டெல்லியில் நடைபெறுகிறது. நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலையின் காரணமாக தொற்றுப் பரவல் அதிகரித்துள்ளது. மேலும் நாளை முதல் 45வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படவும் உள்ளது. இந்நிலையில் தொற்றுப்பரவல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வது தொடர்பாகவும், தடுப்பூசி செலுத்துதல் தொடர்பாகவும், பிரதமர் மோடி தலைமையில் இன்று நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Comment

Successfully posted