வேலூர் தேர்தல் முடிவுகள் அதிமுகவின் செல்வாக்கை உணர்த்துகின்றன: தலைமைக்கழகம் அறிக்கை

Aug 10, 2019 06:35 AM 423

வேலூர் தேர்தல் முடிவுகள் அதிமுகவின் செல்வாக்கை உணர்த்தும் விதமாகவே அமைந்துள்ளது என அதிமுக சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டள்ளது.

நடந்து முடிந்த வேலூர் மக்களவை தேர்தல் முடிவுகள் குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளரும் இணை ஒருங்கிணைப்பாளரும் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர். அந்த அறிக்கையில், அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்திற்கு 46.51% வாக்குகள் கிடைத்துள்ளது என்றும், மிக மிக குறைந்த வாக்கு வித்தியாசத்திலேயே அவர் வெற்றி வாய்ப்பை இழந்துள்ளார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அளித்துச்சென்ற வாக்கு வங்கி சிந்தாமல், சிதறாமல் அதிமுகவிடமே உள்ளது என முடிவுகள் தெரிவிக்கின்றன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலூர் தேர்தல் முடிவுகள் அதிமுகவின் செல்வாக்கை உணர்த்தும் விதமாக அமைந்துள்ளதாகவும், இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்த வேலூர் தொகுதி மக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியை முதலமைச்சரும் துணை முதலமைச்சரும் தெரிவித்துக்கொள்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Comment

Successfully posted