பதிவாளர் அலுவலகத்தில் கணக்கில் வராத பணம் சிக்கியது !

Oct 16, 2018 10:25 AM 356

தருமபுரி அருகே சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய திடீர் சோதனையில் கணக்கில் வராத பணம் பிடிபட்டது.

தருமபுரி மாவட்டம் காரிமங்கலத்தில் இயங்கி வரும் சார் பதிவாளர் அலுவலகத்தில் நள்ளிரவில் லஞ்சம் பெற்றுக் கொண்டு பத்திரப்பதிவு நடப்பதாக, ரகசிய தகவல் கிடைத்தது.

இதைத்தொடர்ந்து அந்த அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். 3 மணி நேரம் நடத்தப்பட்ட சோதனையில், கணக்கில் வராத 47ஆயிரத்து, 536 ரூபாயை கைப்பற்றப்பட்டது.

இது தொடர்பாக இடைத்தரகர்கள் உட்பட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Comment

Successfully posted