பத்திரிக்கை தர்மம் மீறப்படும் போது நடவடிக்கை கட்டாயம் - அமைச்சர் கடம்பூர் ராஜு

Oct 11, 2018 04:18 AM 357

பத்திரிகை தர்மம் மீறப்படும் போது நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுவதாக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,தாமிரபரணி புஷ்கர நிகழ்ச்சியில் பக்தர்கள் பாதுகாப்புடன் குளிப்பதற்காக முறப்பநாட்டில் 5 லட்சம் ரூபாய் செலவில் தடுப்பு சுவர் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

பத்திரிக்கை சுதந்திரம் என்பது தரங்கெட்ட விமர்சனமாக இருக்க கூடாது என்று வலியுறுத்திய அவர், யாருடைய மனதையும் புண்படுத்தாமல் விமர்சனம் இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

பத்திரிக்கை தர்மத்தை தாண்டும் நேரங்களில், நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுவதாகவும் அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்தார்.

 

Comment

Successfully posted

Super User

பத்திரிக்கை சுதந்திரம் என்ற பெயரில் கண்டதை எழுதி விளம்பரம் தேடுவதும் பொய்களை உண்மைகளாக திரித்து எழுதுவதே நக்கீரண் போன்ற பத்திரிக்கைகளுக்கு வாடிக்கையாகிவிட்டது.கைது நடவடிக்கை சரியானதே.


Super User

அருமை