டெல்லியில் அனைத்துக்கட்சி கூட்டம் இன்று தொடங்கியது

Jun 16, 2019 12:50 PM 65

நாடாளுமன்றம் நாளை கூட உள்ளநிலையில் அனைத்துக்கட்சி கூட்டம் டெல்லியில் தொடங்கி உள்ளது.

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் 303 தொகுதிகளை கைப்பற்றி தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை பாஜக தக்க வைத்துள்ளது. இதனிடையே 17-வது மக்களவையின் முதல் கூட்டம் நாளை நடைபெற உள்ளநிலையில், டெல்லியில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம் தொடங்கி உள்ளது. இதில் பாஜக, காங்கிரஸ், அதிமுக, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.

கூட்டத்தொடரை சுமூகமாக நடத்துவது குறித்து அனைத்துக்கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசிக்கப்பட உள்ளது. நாடாளுமன்ற கூட்டத்தொடரில் உடனடி முத்தலாக் தடை மசோதா, தொழிலாளர் சட்ட மசோதா உள்ளிட்ட முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய பாஜக அரசு முடிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Comment

Successfully posted