இணை ஒருங்கிணைப்பாளர் முன்னிலையில் மாற்று கட்சியினர் அதிமுகவில் இணைந்தனர்

Jan 11, 2022 04:17 PM 4468

மாற்று கட்சிகளில் இருந்து 600-க்கும் மேற்பட்டோர் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அண்ணாதிமுகவில் இணைந்தனர்.

சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள அதிமுக புறநகர் மாவட்ட அலுவலகத்தில், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில், பாமக சேலம் வடக்கு மாவட்ட செயலாளர் ஏ.ஆர்.பி. சாம்ராஜ் தலைமையில், 500க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் அண்ணா திமுகவில் இணைந்தனர்.

image

இதேபோன்று கடலூர் தெற்கு மாவட்ட அமமுக புரட்சித்தலைவி பேரவை செயலாளர் திருமலைவாசன் மற்றும் ஆத்தூர் அமமுக ஒன்றிய செயலாளர் கலைசெல்வன் ஆகியோர் தலைமையில் 50க்கும் மேற்பட்ட அமமுக நிர்வாகிகள் அண்ணா திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

இதேபோன்று சேலம் நெடுஞ்சாலை நகர் இல்லத்தில், அமமுக சேலம் மாவட்ட இளம்பெண்கள் பாசறை துணைத்தலைவர் ராஜேஸ்வரி, 40வது வட்ட கழக செயலாளர் ஏழுமலை ஆகியோர் இணை ஒருங்கிணைப்பாளரை சந்தித்து தங்களை அண்ணா திமுகவில் இணைத்து கொண்டனர்.

இந்த நிகழ்வின்போது, அதிமுக அமைப்பு செயலாளர் செம்மலை, சேலம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஏவி ராஜு, மாவட்ட செயலாளர் வெங்கடாசலம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்.கே.செல்வராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.


Comment

Successfully posted