ஜம்மு காஷ்மீரில் இந்திய ராணுவம் நடத்திய தாக்குதல் - பயங்கரவாதிகள் இருவர் சுட்டுக்கொலை

Nov 01, 2018 01:36 PM 674

ஜம்மு காஷ்மீரில் இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் பயங்கரவாதிகள் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பட்காம் மாவட்டத்தில் உள்ள சாகு அரிசால் வனப்பகுதியில் தீவிரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாக இந்திய ராணுவத்தினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் அங்கு தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட ராணுவத்தினர் மீது, பயங்கரவாதிகள் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.

இதனை சுதாரித்துக்கொண்ட ராணுவ வீரர்கள் பதில் தாக்குதலில் ஈடுபட்டனர். நீண்ட நேரம் நீடித்த இந்த துப்பாக்கிச் சண்டையில் பயங்கரவாதிகள் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதனால் அங்கு பதட்டமான சூழல் நிலவி வருகிறது.

Comment

Successfully posted