சிறந்த தொழிலாளிதான், எதிர்காலத்தில் சிறந்த முதலாளியாக முடியும் : முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

Dec 29, 2018 07:47 AM 324

சிறந்த தொழிலாளிதான், எதிர்காலத்தில் சிறந்த முதலாளியாக முடியும் என்பதற்கு, இந்தியா சிமெண்ட்ஸ் நிர்வாக இயக்குநர் ஸ்ரீனிவாசன் உதாரணமாக திகழ்வதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி புகழாரம் சூட்டியுள்ளார். இந்தியா சிமெண்ட்ஸ் நிர்வாக இயக்குனர் என்.ஸ்ரீனிவாசன் குறித்த புத்தக வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இந்தியா சிமென்ட் நிறுவனம் கடந்து வந்த 70 ஆண்டுகால பயணத்தை விளக்கும் விதமாக இந்த Coffee Table புத்தகம் அமைந்துள்ளதாக குறிப்பிட்டார். இந்த நிறுவனத்தின் வளர்ச்சிக்கு பெரும் வங்கு வகித்த ஸ்ரீனிவாசன், சமூக பணிகளிலும் தன்னை ஈடுபடுத்தி வருவதாக கூறினார்.

முன்னதாக அந்த புத்தகத்தினை முதலமைச்சர் வெளியிட இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டனுமான மகேந்திர சிங் தோனி பெற்றுக் கொண்டார். விழாவில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் மற்றும் மூத்த வீரர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Comment

Successfully posted