ஆவடி நகராட்சியை, மாநகராட்சியாக மாற்றும் மசோதா தாக்கல்

Jul 19, 2019 05:47 PM 71

சட்டப்பேரவையில் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இரு முக்கிய மசோதாக்களை தாக்கல் செய்தார்.

உள்ளாட்சி துறை அலுவலகங்களில் உள்ள முக்கிய அலுவலர்களின் பதவி காலத்தை மேலும் 6 மாதங்கள் நீட்டிப்பதற்கான மசோதாவை உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தாக்கல் செய்தார். மேலும், ஆவடி நகராட்சியை மாநகராட்சியாக மாற்றுவதற்கான மசோதாவையும் எஸ்.பி.வேலுமணி தாக்கல் செய்தார்.

ஆவடி நகராட்சியை மாநகராட்சியாக மாற்ற வேண்டும் என்பது மக்களின் வெகுநாள் கோரிக்கையாக இருந்தது குறிப்பிடத்தகுந்தது.

Comment

Successfully posted