நாடு முழுவதும் கொண்டாடப்படும் அப்துல் கலாமின் பிறந்தநாள் விழா !

Oct 15, 2018 10:36 AM 747

மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜே அப்துல்கலாம் பிறந்த தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் பிறந்தநாளை விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. அதன்படி சென்னை தி.நகரில் அமைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவ படத்திற்கு அறிவியில் ஆலோசகர் பொன்ராஜ் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர் ரத்ததான முகாமை தொடங்கி வைத்த அவர், பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அறிவுசார் அரசியல் மாற்றத்தை முன்னெடுத்து அணியை உருவாக்க முயற்சிகளை மேற்கொள்ள இருப்பதாக தெரிவித்தார்.

மேலும் டெல்லியிலும், தமிழகத்தில் உள்ள அனைத்து தலைநகரங்களிலும் அப்துல்கலாம் அறிவியல் சார்பு மையம் அமைக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு பொன்ராஜ் கோரிக்கை விடுத்தார்.

Comment

Successfully posted

Super User

அப்துல்கலாம் ஐயா பிறந்த நாள் வாழ்த்துக்கள்