டிஜே இசையின் சத்தத்தால் மேடையிலேயே உயிரிழந்த மணமகன்

Feb 17, 2020 12:17 PM 3258

தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத் பகுதியை சேர்ந்த 25 வயது இளைஞர் திருமணத்தில்  வைக்கப்பட்டிருந்த டிஜே இசையின் அதீத சத்தத்தால் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

திருமணம் என்பது முன்பு ஒரு சடங்காக பார்க்கப்பட்டது.ஆனால் தற்போது நடக்கும் திருமணங்களில் குடி, ஆட்டம், பாட்டம் என கலாச்சாரமே மாறிவிட்டது.அதை தான் அனைவரும் விரும்புகின்றனர் என்றும் கூறலாம்.அந்த வகையில் தெலங்கானா மாநிலத்தை சேர்ந்த கணேஷ் என்ற 25 வயது இளைஞருக்கு ஸ்வப்னா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்துள்ளது.

திருமணம் முடிந்தவுடன் டிஜே இசை நிகழ்ச்சியில் மணமகன் டான்ஸ் ஆடியுள்ளார்.ஆனால் அதீத சத்தத்தால் மாரடைப்பு ஏற்பட்டு மேடையிலேயே மயங்கி விழுந்துள்ளார்.உடனே மருத்துவமனையில் இவரை அனுமதிக்க சென்ற போது மாரடைப்பால் உயிரிழந்துவிட்டார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.இதனால் சோகத்தில் மூழ்கிய மணமகள் கதறி அழுதுள்ளார்.திருமணமான அன்றே மணமகன் உயிரிழந்துள்ள இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Comment

Successfully posted